ஈரோட்டுப் பூகம்பத்தால்

January 8, 2009 at 1:27 p01 | Posted in Uncategorized | Leave a comment

வைகுண்டஏகாதேசி ? ! தமிழகம் முழுக்க கோவில்களில் சொர்கவாசல் திறப்பு நிகழ்வுகள்- இரவு முழுவதும் தூங்காமல் சொர்கத்திற்கு செல்ல வழிமுறைகள் செய்யப்பட்டன. விரதங்கள் இருந்தவர்கே வெட்ட வெளிச்சம் எத்தனை முறை சொர்க லோகத்தில் காலார நடந்தார்கள். படுத்தார்கள். இடத்தை வளைத்தார்கள் ??.
periyar

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு
தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்.

-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பாராட்டிப் போற்றி வந்த
பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால்
இடியுது பார்.

-கலைஞர்

மானம் கெடுப்பாரை
அறிவை தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த
கடப்பாரை

– கவிஞர் காசி ஆனந்தன்
( மேற்கண்ட கவிதைத் துளிகள் ஓவியர் புகழேந்தியின் திசை முகம் புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது )

Advertisements

காசி ஆனந்தன் நறுக்குகள்

December 26, 2008 at 1:27 p12 | Posted in Uncategorized | Leave a comment

 

kasianandan_350

கூடு

சொந்த வீடு

கட்டுகிறது

குருவி…

நான்

     குடியிருக்கும்

வாடகை

     வீட்டில்

 

களம்

இது

எப்படி ?

தோழா?

நஞ்சை

     உண்டது

     நீ…

செத்து

     விழுந்தது

     அவன்

 

பாய்ச்சல்

 

பதுங்க

     அல்ல

எங்கள்

     மண்ணின்

     பதுங்கு குழிகள்…

பதுங்கித்

     தாக்க

 

பங்கு

எதிரிக்கு தெரியாமல்

     சோறு போடுகிறாள்

     கிழவி

     போராளிக்கு…

நினைக்கலாம்

     நீ

     அவனுக்கு

     அவள்

உயிருட்டுவதாய்

இல்லை

அவன் சாவில்

பங்கு

கேட்கிறாள்

கிழவி.

நெருப்பு

நெருப்பில்

     சேரி

எரித்தகாலம்

நேற்று

நில் !

     நெருங்காதே

     சேரி

எரியும் காலம்

இன்று

 

[நன்றி- புதிய தமிழர் கண்ணோட்டம்- செப் 2008]

ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீச்சு

December 17, 2008 at 1:27 p12 | Posted in Uncategorized | Leave a comment

 

ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீச்சு

ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீச்சு

நானே பெரியவன் என்று எண்ணுகிறவர்கள்  யாராக இருந்தாலும் உலக அரங்கில் அவமானப்பட நேரிடும் என்பதை   ஜார்ஜ் புஷ் மீதான செருப்பு வீச்சு நிகழ்வு காட்டுகிறது. வல்லரசான அமெரிக்க அதிபருக்கு இந்த நிலை என்றால் இராசபக்சேவுக்கு, உலகத்தின் எந்த மூலையிலிருந்தும், தமிழன் செருப்படி கொடுப்பான்.  

 thiruma

[இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து பார்வையற்றோர் உண்ணாநிலை நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேச்சு ]

நன்றி : தமிழோசை நாளிதழ் -17.12.2008  .                                  

காஞ்சிபுரத்தில் சமுகநீதி சாதனையாளர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

December 13, 2008 at 1:27 p12 | Posted in Uncategorized | Leave a comment

audiance3dr-mm5muzhakkam1kako4

சமூக நீதிச் சாதனையாளர் மறைந்தார்.

December 11, 2008 at 1:27 p12 | Posted in Uncategorized | Leave a comment

vp-sing-12

இந்தியச் சமூக வரலாற்றில் மேல்வகுப்பில் பிறந்தவர்களில் தென்னாட்டிலும் வட நாட்டிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பேரில் அக்கறை கொண்டவர்கள் மிகச் சிலரே ஆவார். அப்படிப்பட்டவர்களுள் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 60 கோடி பிறபடுத்தப்பட்ட வகுப்பு மக்களும் மொழி, மாநிலம், கட்சி, உள்சாதி வேறுபாடு கருதாமல் ‘வாழ்க வி.பி.சிங்’என மனங்குளிர வாழ்த்தப்படுவதற்கான சீரிய வகுப்புரிமைச் சாதனையைப் படைத்தவர் ஆவார். மாமனிதர் வி.பி.சிங் ! அன்னார் 25.06.1931இல் பிறந்தார்.2.12.1989 முதல் 10.11.1990 வரை இந்தியத் தலைமை அமைச்சராக விளங்கினார். 27.11.2008 அன்று 78ஆம் அகவையில் மறைவுற்றார்.
பிறப்பால் அவர் சத்திரிய வகுப்பினர் என்றாலும் 1989இல் பிரதமரான வி.பி.சிங் தந்தை பெரியார், மேதை அம்பேத்கர், இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய மகாத்மா புலே இவர்களின் வருணாசிரம ஒழிப்பு கொள்கை, வகுப்புவாரி உரிமைக் கொள்கை இவற்றைப் புரிந்துகொள்வதிலும், வகுப்புரிமை வந்து சேரத் தன்னால் ஆனஎல்லாப் பங்களிப்புகளையும் செய்வதிலும் ஈடு இணையற்ற இந்தியத் தலைமை அமைச்சராக விளங்கினார். பிற்படுத்தப்பட்டோருக்கு உரிமை வழங்கிய ஒரே காரணத்தினாலேயே- அன்று வெகுமக்களுக்கு எதிராக- மூர்க்கமாக மண்டல் பரிந்துரை அமலாக்கத்தை எதிர்த்த இந்துமத வெறி பிடித்த பா.ச.க, கண்மூடித்தனமாக எதிர்த்த காங்கிரசு இவற்றின் எதிர்ப்பை துச்சமெனத் தள்ளிவிட்டு மண்டல் பரிந்துரை அமலாக்கத்தில் உறுதியாக நின்றார்…
மய்ய- மாநில அரசுகளில் வேலையிலும்,கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுவதற்கான தெளிவான உரிமை ஆவணத்தை பி.பி.மண்டல் வழங்கினார். அந்த ஆவணத்தின் ஒரு பகுதியின் முதலாவது செயல்பாட்டை மாமனிதர் விசிவநாத் பிரதாப் சிங் வழங்கினார்.
மண்டல் அவர்களும், வி.பி.சிங் அவர்களும் கோடிக்கணகான பிற்படுத்தப்பட்டோரின் இல்லங்களில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த ஈகச் சுடரொளிகள் ஆவர். மண்டல் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார். இன்று மாமனிதர் வி.பி.சிங் அவர்களும் மறைந்துவிட்டர். வாழ்க, வி.பி.சிங் புகழ்!.
1.11.2008 -வே.ஆனைமுத்து.
[சிந்தனையாளன் திசம்பர் திங்கள் இதழில் ஆசிரியர் வே.ஆனைமுத்து அவர்களின் நினைவேந்தல் கட்டுரையின் ஒரு பகுதி ]
anaimuthu2

தமிழக முதல்வரை போற்றுவோம். ஈழ மக்களுக்காக தாய்த் தமிழகமாக மாறுவோம்.

October 15, 2008 at 1:27 p10 | Posted in Uncategorized | Leave a comment

அக்டோபர் 14. வேற்றுமையில் ஒற்றுமை. கட்சிகளை மறந்து  ஈழத்தில்லே போராடிக்கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்காக தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளையும் இழப்போம் என்ற அறிவிப்பு. நம்மை நெஞ்சை நிமிரச் செய்கிறது.

துரோகிகள் கருனா வடிவில் இலங்கையில் மட்டுமல்ல !

இங்கேயும் புரட்சித் தலைவிகள் .. புயல்கள் … கேப்படன்கள் வடிவில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிரோம்.

கட்சிகளை மறந்து குரல் கொடுத்த தமிழர் தலைவர்களை போற்றுவோம்.

நம் மக்களுக்காக கட்சிகளை துறந்தால் வரலாறு நம்மை மறக்காது.

விலகிய “புரட்டு கும்பல்களை வரலாறு மன்னிக்காது.

ஒன்று மட்டும்  இராஜ பக்சேவுக்கு சொல்லுவோம்.

உங்கள் ஆயுதங்கள் வெற்றியை  ஈட்டாது.

‘கருனாகும்பல்களின் விசுவாசம் வெற்றிப்பாதையை காட்டாது.

அநீதிகளுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் தோற்றதாக சரித்திரமில்லை.

அன்புடன்…

தமிழ்நாட்டில் நந்திகிராமம் மாங்கால் சிற்றூரா?

October 6, 2008 at 1:27 p10 | Posted in Uncategorized | Leave a comment

அக்டோபர் 4 தினசரிகளில் குறிப்பாக தமிழோசை,  ஆங்கில நாளிதழ்களான டிகான் கிரானிக்கல் மற்றும்  நியு இன்டியன் எக்ஸ்பிரஸ் மேற்கண்ட தலைப்பையொட்டி செய்திகள் வெளியுட்டள்ளது.  குறிப்பிட்டுள்ள நாளிதழ்களுக்கு தமிழ்நாட்டிலும் நந்திகிராமம் போன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்ற ஆசை இருப்பது வேறு செய்தி.

நிகழ்வு1.  மேற்கு வங்கத்தில் தொழில் மைய நடவடிக்கையான சிறப்பு பொருளாதார நடவடிக்கையை எதிர்த்து அப்பகுதி கிராமமக்கள்  வாழ்உரிமைக்காக இன்றும் போராடிக்கொண்டு இருகிறார்கள். பல உயிர்களை இழந்திருகிறார்கள். யாரை எதிர்த்து ? தொழிலாளர்களின் தோழன் !? கம்யூனிஸ்டுகளை எதிர்த்து , பன்நாட்டு முதலாளிகளுக்கு சிவப்புக் கொடி விரித்து மன்னிக்கவும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.எற்கனவே உள்ளூர் முதலாளிகளின் சாம்ராஜ்ஜியத்தில் செங்கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது .நந்திகிராம மக்களை பார்த்து சிரிக்கிறது.

நிகழ்வு 2.   அதே மேற்கு வங்கம். ஊர் பெயர் இப்போது மாறி இருக்கிறது. ஆம் சிங்குர். அட இங்கேயும் கம்யூனிஸ்டுகள் வரலாறு படைக்கிறார்கள். காம்ரேடு ரத்தன் டாடா இப்போது அவர்கையில் செங்கொடி. ரூபாய் 1,00,000யில் கார் உற்பத்திசெய்யப் போகிறாராம்.எல்லோர் கையில் செல்போன் இருப்பது போல எல்லோரும் காரிலேயே செல்லலாம்.எழைக்கும் கார் பணக்காரனுக்கும் கார். மார்க்சிஸ்டுகளின் கொள்கை மெல்ல மெல்ல பலித்துக்கொண்டுவருகிறது.எல்லாம் சரி தொழிற்சாலை கட்ட போகும் 1000ஏக்கரில் 400ஏக்கர் விளை நிலம். உழவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட்து. பாட்டாளி வர்க்க சர்வதிகாரம்  காம்ரேடு ரத்தன் டாடா மூலம் செயல்படுத்தப்படுகிறது. உழவர்களின்  தீவிர எதிர்ப்பால் காம்ரேடு ரத்தன் டாடா இப்போது வேறு இடத்திற்கு கடையை கட்டுகிறாராம். முதல்வர் புத்ததேவ் கடைசி முயற்சி செய்தும் டாடா டாட்டா காட்டிவிட்டாராம்.

நிகழ்வு 3.  அக்டோபர் 2  தேசத்தந்தை காந்தி பிறந்தநாள்.எல்லா ஊராட்சி அமைப்புகளும் அன்று கூடுகிறது. ஆனால் 10 கிராம சபைகள் மட்டும் வித்தியாசமாக முடிவைஎடுக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை. குறிப்பாக மாங்கால் ஊராட்சித்தலைவர் திரு தமிழினியன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு மக்களுக்காக போராடி வருகிறார். மாத்தூரில் 1997ல் 650ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட்து. இந்நாள் வரை பயன்படுத்தாமல் கடந்த ஆண்டு 2007ல் தான் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படட்து. அரசு அறிவித்தப்படி தொழிற்சாலையில் உள்ளூர் உழவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. உழவர்கள் போராடி 30 பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றனர்.

 

நிகழ்வு 3.  அக்டோபர் 2  தேசத்தந்தை காந்தி பிறந்தநாள்.எல்லா ஊராட்சி அமைப்புகளும் அன்று கூடுகிறது. ஆனால் 10 கிராம சபைகள் மட்டும் வித்தியாசமாக முடிவைஎடுக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை. குறிப்பாக மாங்கால் ஊராட்சித்தலைவர் திரு தமிழினியன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு மக்களுக்காக போராடி வருகிறார். மாத்தூரில் 1997ல் 650ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட்து. இந்நாள் வரை பயன்படுத்தாமல் கடந்த ஆண்டு 2007ல் தான் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படட்து. அரசு அறிவித்தப்படி தொழிற்சாலையில் உள்ளூர் உழவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. உழவர்கள் போராடி 30 பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதியன்று நடைப் பெற்ற சிற்றூர் அவைக் கூட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள 10 ஊராட்சிகளிலும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாத்தூர் ஊராட்சித் தலைவர் தமிழினியன் தலைமையில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ,இந்தியா சிற்றூர்களில் வாழ்கிறது என்றார் காந்தி. சிற்றூர் மக்களின் தொழிலான உழவுத்தொழிலை மேன்மையுற செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரால் நாடெங்கும் உழவர்களின் விளைநிலங்கள் பறிக்கப்படும் கொடுமை நடைபெற்று வருகிறது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களால்

1.  எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி கிடைக்க வில்லை.

2.  உழவர்களுக்கு வேலைக்கு உத்திரவாதம் இல்லை.

3.  தொழிற்சலைகளால் சுற்றுச்சூழல் மாசு

4.  உழவர்கள் சொந்த மண்ணை விட்டு அகதிகலாகும் நிலைமை.

நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிட தீர்மானங்கள் நிறைவேற்றிய 10 ஊராட்சி அமைப்புகளை பாராட்ட வேண்டும்.  மாத்தூர் ஊராட்சித் தலைவர் தமிழினியன் அவர்களின் ஒருங்கிணைப்பு முயற்சி உழவர்களை மேன்மைக்கு கொண்டு செல்லும்.  உழவர்கள் ஒத்துழைப்பு எந்த எல்லைவரை செல்லும். மேற்கு வங்கம் நந்திகிராமம் நமக்கு பாடம் சொல்லித் தருமா?

அன்புடன்..

Create a free website or blog at WordPress.com.
Entries and comments feeds.