சமூக நீதிச் சாதனையாளர் மறைந்தார்.
December 11, 2008 at 1:27 p12 | Posted in Uncategorized | Leave a comment
இந்தியச் சமூக வரலாற்றில் மேல்வகுப்பில் பிறந்தவர்களில் தென்னாட்டிலும் வட நாட்டிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பேரில் அக்கறை கொண்டவர்கள் மிகச் சிலரே ஆவார். அப்படிப்பட்டவர்களுள் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 60 கோடி பிறபடுத்தப்பட்ட வகுப்பு மக்களும் மொழி, மாநிலம், கட்சி, உள்சாதி வேறுபாடு கருதாமல் ‘வாழ்க வி.பி.சிங்’என மனங்குளிர வாழ்த்தப்படுவதற்கான சீரிய வகுப்புரிமைச் சாதனையைப் படைத்தவர் ஆவார். மாமனிதர் வி.பி.சிங் ! அன்னார் 25.06.1931இல் பிறந்தார்.2.12.1989 முதல் 10.11.1990 வரை இந்தியத் தலைமை அமைச்சராக விளங்கினார். 27.11.2008 அன்று 78ஆம் அகவையில் மறைவுற்றார்.
பிறப்பால் அவர் சத்திரிய வகுப்பினர் என்றாலும் 1989இல் பிரதமரான வி.பி.சிங் தந்தை பெரியார், மேதை அம்பேத்கர், இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய மகாத்மா புலே இவர்களின் வருணாசிரம ஒழிப்பு கொள்கை, வகுப்புவாரி உரிமைக் கொள்கை இவற்றைப் புரிந்துகொள்வதிலும், வகுப்புரிமை வந்து சேரத் தன்னால் ஆனஎல்லாப் பங்களிப்புகளையும் செய்வதிலும் ஈடு இணையற்ற இந்தியத் தலைமை அமைச்சராக விளங்கினார். பிற்படுத்தப்பட்டோருக்கு உரிமை வழங்கிய ஒரே காரணத்தினாலேயே- அன்று வெகுமக்களுக்கு எதிராக- மூர்க்கமாக மண்டல் பரிந்துரை அமலாக்கத்தை எதிர்த்த இந்துமத வெறி பிடித்த பா.ச.க, கண்மூடித்தனமாக எதிர்த்த காங்கிரசு இவற்றின் எதிர்ப்பை துச்சமெனத் தள்ளிவிட்டு மண்டல் பரிந்துரை அமலாக்கத்தில் உறுதியாக நின்றார்…
மய்ய- மாநில அரசுகளில் வேலையிலும்,கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுவதற்கான தெளிவான உரிமை ஆவணத்தை பி.பி.மண்டல் வழங்கினார். அந்த ஆவணத்தின் ஒரு பகுதியின் முதலாவது செயல்பாட்டை மாமனிதர் விசிவநாத் பிரதாப் சிங் வழங்கினார்.
மண்டல் அவர்களும், வி.பி.சிங் அவர்களும் கோடிக்கணகான பிற்படுத்தப்பட்டோரின் இல்லங்களில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த ஈகச் சுடரொளிகள் ஆவர். மண்டல் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார். இன்று மாமனிதர் வி.பி.சிங் அவர்களும் மறைந்துவிட்டர். வாழ்க, வி.பி.சிங் புகழ்!.
1.11.2008 -வே.ஆனைமுத்து.
[சிந்தனையாளன் திசம்பர் திங்கள் இதழில் ஆசிரியர் வே.ஆனைமுத்து அவர்களின் நினைவேந்தல் கட்டுரையின் ஒரு பகுதி ]

Leave a Comment »
RSS feed for comments on this post. TrackBack URI
Leave a Reply
Blog at WordPress.com. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.